உலக குடியுரிமைக்கான ஆங்கில மொழிக்கல்வி தொடர்பான ஜுனியர் ஆராய்ச்சிக் கருத்தரங்கு : சவால்களும் வாய்ப்புக்களும் – 2016

ஆகஸ்ட் 2nd, 2016

15 ஜுலை 2016 அன்று, உலக குடியுரிமைக்கான ஆங்கில மொழிக் கல்வி தொடர்பான ஜுனியர்
ஆராய்ச்சிக் கருத்தரங்கு : சவால்களும் வாய்ப்புக்களும் – 2016 என்ற நிகழ்வானது களனிப் பல்கலைக்கழக
ஆங்கில மொழிக் கற்பித்தல் அலகினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.
இக் கருத்தரங்கானது பல்கலைக்கழக மாணவர்களால் பல்வேறுபட்ட பிரதேசங்களின் ஆங்கில மொழி
கற்பித்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளை முன்வைப்பதனை நோக்கமாக கொண்டு
அமைந்திருந்தது.

TESL பட்ட நிகழ்ச்சித் திட்டத்;தில் 16 ஆய்வுச் சுருக்கங்கள் 46 பல்கலைக்கழக மாணவர்களால்
முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பட்டப் பின் படிப்புக்கள் பீட
பணிப்பாளர் கலாநிதி ஹர்~ன ரபுக் வெல்ல அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார். மேலும் இவ் விழாவில் களனிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சுனந்த
மத்தும பண்டார அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இவர்களுடன் மானிடவியல் பீட
பீடாதிபதி பேராசிரியர் லக்ஸ்மன் செனவிரத்ன, அவர்கள் களனிப் பல்கலைக்கழக ஆராய்ச்சிமன்ற
தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் எம்.ஜெ.எல். விஜேரத்ன அவர்கள், ELTU துறைத் தலைவர் திருமதி மகிசி
ரணவீர அவர்களும், பல்வேறு துறைத் தலைவர்கள், கல்விசார், சாரா ஊழியர்கள், பல்கலைக்கழக
மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.