விஞ்ஞான பீடத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் பொன் விழாக் கொண்டாட்டங்கள்.

களனிப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடம் 1967ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமையைக் குறிக்கும் பொன் விழாக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டில் விஞ்ஞான பீட பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வைகாசி மாதம் 18ந் திகதி முதல் 23ந் திகதிவரை பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் பேலியகொடை வித்தியாலங்கார பிரிவேனாவிலும் கொண்டாடப்பட்டன. வைகாசி 18 2017ம் நாளன்று பல்கலைக்கழக ஸ்ரீ தர்மாலோக மண்டபத்தில் விஞ்ஞான பீடத் தலைவர் பேராசிரியர் பீ எம் ஜயவர்த்தனா, திணைக்களத் தலைவர்கள் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மாணவர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் முன்றலில் சங்கைக்குரிய பிற்றிக்கல குணரத்தின தேரரின் பிரித் ஓதும் நிகழ்வு நிகழ்ந்தது. பேலியகொட வித்தியாலங்கார பிரிவேனாவில் வைகாசி 23ந் திகதியன்று மரம் நடும் நிகழ்வொன்றும் அதிசங்கைக்குரிய திரிபிடக வாகீஸ்வராச்சார்ய மகோபாத்தியாய பண்டித விமலவித்யாவே தர்மகீர்த்தி ஸ்ரீ குசல தம்ம தேரர் உட்பட சங்கைக்குரிய 50 தேரர்களுக்கு தானம் வழங்குதலும் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்; டீ எம் சேமசிங்க அவர்கள் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஸ்மன் செனிவிரத்தின பீடத் தலைவர்கள் திணைக்களத் தலைவர்கள் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பதிவாளர்கள் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்