தொழில்முறை நோக்கங்களுக்கான ஆங்கில டிப்ளோமா முடித்தவர்களுக்கான விருது வழங்கும் விழா (DEPP) – 2017

ஆங்கில மொழி கற்பித்தல் திணைக்களம் (DELT) நடத்திய தொழில்முறை நோக்கங்களுக்கான ஆங்கில டிப்ளமோ (DEPP) முடித்த கல்வியாண்டு 2016/2017 (XII தொகுதி) மாணவர்களின் விருது வழங்கும் நிகழ்வானது 2017 ஜூலை 18 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 45 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
களனிப் பல்கலைக்கழகத்தின் உப துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் பேராசிரியரான பற்றிக் ரட்நாயக்க, DELT இன் தலைவரான கலாநிதி கௌசல்யா பெரேரா, DELT யின் முன்னாள் தலைவர் திருமதி மஹிஷி ரணவீர, DEPP இன் ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜீவனி பிரபாலன் மற்றும் சான்றிதழ்கள் பெறுவோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.