ஒரு சர்வதேச கருத்துக்களம் ஒன்றை நடாத்துவதற்கான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் : கொழும்பில் சர்வதேச கருத்தரங்கு

ஆகஸ்ட் 29th, 2017

சர்வதேச கம்யூனிச சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் திரு. Niu Xiping அவர்களும், பிரதிநிதிகளும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.செமசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று கடந்த 2017 ஆகஸ்ட் 25 ஆம் திகதி அன்று துணைவேந்தர் அலுவலகத்தில் சந்தித்து இந்த வருட இறுதியில் களனிப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச கம்யூனிஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து கொழும்பில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கருத்தரங்கு தொடர்பாக ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சீனாவில் கிங் மற்றும் ஹான் வம்சத்தினர் காலத்திலிருந்தே ,தரைவழிப் பட்டுப் பாதை போன்று கடல்சார் பட்டுப் பாதையானது நீண்ட காலமாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கான பாலமாகவும் சம்பந்தப்பட்ட நாடுகளில் ஒரு பரஸ்பர கற்றல் மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு காரணியாகவும் இருந்து வருகிறது. அந்தவகையில் இது தொடர்பான வரலாற்றைக் கற்பதையும் அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்வதையும் மேலும் 21 ஆம் நூற்றாண்டில் “ஒரு பெல்ட்,ஒரு வீதி” எனும் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமானப்பணிகளை ஆதரிக்கும் முகமாகவும் அவர்கள் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட கல்விசார் மற்றும் பண்பாட்டு அமைப்புக்களுடன் இணைந்து”கடல்சார் பட்டுப் பாதை ஊடான வரலாற்று பரிமாற்றம் மற்றும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாகரீகங்களுக்கு இடையிலான பரஸ்பர கற்றல்” எனும் கருப்பொருளில் கொழும்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இக் கருத்தரங்கிற்கு தென்கிழக்காசியா, தெற்காசியா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா, தெற்கு ஐரோப்பா போன்ற பட்டுப்பாதை வழியே அமைந்துள்ள நாடுகள் மற்றும் பட்டுப்பாதை தொடர்பான கற்றலில் தொடர்புடைய நாடுகள் மற்றும் பகுதிகளில் உள்ள கல்வியாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
இக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் செனவிரத்ன அவர்களும், மானுடவியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பட்ரிக் ரத்நாயக்க அவர்களும், சிங்களத் துறைத்தலைவர் வணக்கத்திற்குரிய மல்வானே சந்திரரத்ன அவர்களும், சிங்களத் துறைப் பேராசிரியர் நிமல் கருணாரத்ன அவர்களும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த திருமதி மஹிஷி ரணவீர அவர்களும், நவீன மொழிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் குமாரி பிரியங்க ஜயசூரிய அவர்களும் மற்றும் பதிவாளர் திரு w. m. கருணாரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.