ஒடிசா, புபனேஷ்வர், இந்தியாவில் உள்ள ஆசிய வணிக முகாமைத்துவ’ கல்லூரியுடன் ஒரு ஒப்பந்தம்

செப்டம்பர் 6th, 2017

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசாவில் உள்ள புபனேஷ்வர், ஆசிய வணிக முகாமைத்துவ’ கல்லூரி ஆகியவற்றிற்கு இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை, செப்டம்பர் 6, 2017 அன்று துணைவேந்தர் அலுவலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டது.
களனிப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டி.எம்.செமசிங்கவின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில் பேராசிரியர் நீலக்சி.c. பிரேமவர்த்தன, (பணிப்பாளர், சர்வதேச விவகாரங்களுக்கான மையம்)கலந்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்’இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆய்வுத் திட்டங்களைத் தொடங்குவதும் ஆகும்.