பேஸ்போல் சாம்பியன்ஸ் உபவேந்தரைச் சந்தித்தனர்

செப்டம்பர் 6th, 2017

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பேஸ்போல் (ஆண்கள்) போட்டியில் சாம்பியன் கிண்ணத்தைப் பெற்ற களனிப் பல்கலைக்கழக பேஸ்போல் (ஆண்கள்) அணியினர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அன்று பல்கலைக்கழகத்தின் செனட் அறையில் பல்கலைக்கழக உபவேந்தரைச் சந்தித்தனர்.
இந்த நிகழ்வானது சாம்பியன்களை ஊக்குவிக்கும் நோக்கில் களனிப் பல்கலைக்கழகத்தின் உடற் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் களனிப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் டி.எம். செமசிங்க, விளையாட்டு ஆலோசனை வாரியத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஆர். கலிங்கமுதலி, உடற் கல்வித் துறையின் பதில் பணிப்பாளர் திரு. ஜி.ஜி.யு. சமன் குமார, உடற் கல்வித் துறையைச் சேர்ந்த திரு. A.M.A அத்துகோரல மற்றும் பேஸ்போல் அணியின் சாம்பியன்கள் பங்கு பற்றினர்.