ஊழிய அபிவிருத்திப் பட்டறை

செப்டம்பர் 6th, 2017

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தின் ஊழிய அபிவிருத்தி நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பட்டறை நீர்கொழும்பில் “கோல்டி சண்ட் ஹோட்டலில்” பல்கலைக்கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.
“தலைமைத்துவ திறன்கள்” என்ற தலைப்பில் திரு.சந்திரசிறி சத்தரசிங்க(நிறுவன பயிற்றுவிப்பாளர்) விரிவுரையொன்றை வழங்கினார். மகாநாம விக்ரமசிங்க(தென்னிந்திய இசை திணைக்களம்,கட்புல மற்றும் அரங்கேற்ற கலை பல்கலைக்கழகம்) அவர்கள் “மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு இசை” என்ற தலைப்பில் உரை ஒன்றினை வழங்கினார்.
இந்த பட்டறையில் பேராசிரியர் டி.எம்.செமசிங்க(துணைவேந்தர்) , பேராசிரியர் லக்ஷ்மன் செனவிரத்ன(பிரதி துணைவேந்தர்), டபிள்யூ.எம். கருணாரத்ன(பதிவாளர்), கலாநிதி பண்டார வன்னினாநாயக்க(ஊழிய அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர்) மற்றும் ஏனைய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.