வியாபார முகாமைத்துவ முதுகலைமானிக் கற்கைகளுக்கான(MBA) 11 வது தொகுதியை உள்வாங்கும் ஆரம்ப நிகழ்வு

செப்டம்பர் 13th, 2017

களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தினால் (FCMS) வழங்கப்படும் வியாபார முகாமைத்துவ முதுகலைமானிக் கற்கைகளுக்கான(MBA) 11 வது தொகுதியை உள்வாங்கும் ஆரம்ப நிகழ்வானது 2017 செப்டெம்பர் 8 ஆம் திகதி கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், FCMS ன் பீடாதிபதி டாக்டர் நாரத பெர்னாண்டோ அவர்கள் அறிமுக உரையையும், பிரதான உரையை EPIC Technology Group ன் நிறுவுனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் நயன தேஹிகம அவர்களும் வழங்கினர்.
களனி MBA திட்டமானது இந்தியாவின் முன்னணி வணிகப் பள்ளிகளில் ஒன்றான லக்னோ இந்திய முகாமைத்துவக்கல்வி நிறுவனத்தின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப் பாடத்திட்டமானது ஆரம்பகாலத்தில் இருந்து முகாமைத்துவத்துறையில் ஒரு தொழில்முறை மற்றும் தொழில் முனைவோர் அணுகுமுறையை உடைய தைரியமான வணிகத் தலைவர்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து வருகிறது. இவ் MBA நிகழ்ச்சித்திட்டமானது வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் செயற்படுத்தக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச தொழிற்துறை வருகை ஆகியவற்றின் புதுமையான முறையான பாடநெறிகளையும், செயற்பாடுகளையும் சர்வதேச தொழில்த்துறை விஜயம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இக்கற்கை நெறியானது நிறுவனமொன்றின் உண்மையான வழக்காய்வு ஒன்றையும் மாணவர்கட்கு வழங்குகிறது.
இந்நிகழ்வில் FCMS உடன் இணைந்த துறைத் தலைவர்கள், இவ் MBA பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ருவான் அபேசேகர, FCMS இன் கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் MBA பாடத்திட்டத்தின் புதிய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.