ஐக்கிய அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் வருடாந்த கல்விச்சந்தை – 2017

செப்டம்பர் 13th, 2017

ஐக்கிய அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் வருடாந்த கல்விச்சந்தை-2017 விஞ்ஞான பீடத்தின் ஆய்வுகள் மற்றும் சேவைகள் மையத்தின்(RSC) ஏற்பாட்டில் களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் போர்ட் அறையில் செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்றது.இதனை அமெரிக்காவின் கல்வி ஆலோசனை மையமும் இலங்கை புல்பிரைட் நிறுவகமும் சேர்ந்து நடாத்தியது.இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் கற்கை நெறிகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேரி பர்சொன்ஸ்(மிஸ்ஸெளரி கனாஸ் சிட்டி பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநர் சர்வதேச மாணவர் அலுவல்கள்), பற்றிக் மோரிசன்(துணை இயக்குநர் தெற்கு டகோட்ட பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் அலுவல்கள்),அமீர் சடபி(பதில் இயக்குநர் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச உள்ளெடுப்புகள்), பேராசிரியர் சுசந்த ஹேரத் (சென்.சலூட் ஸ்டேட் பல்கலைகழகத்தின் கணணி விஞ்ஞான துறை),பென் பிங்கர்(விஸ்கான்சின் பல்கலைக்கழகம்). கலாநிதி D.M.S.D.சில்வா(இயக்குநர் RSC),பேராசிரியர் SRD களிங்கமுதலி,கல்வி உத்தியோகத்தர்கள்,உள்நிளைமனவர்கள் மற்றும் பட்டபின்படிப்பு மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.