இந்தோ-ஸ்ரீலங்கா ஹிந்தி மாநாடு – 2017

செப்டம்பர் 14th, 2017

இந்தோ-ஸ்ரீலங்கா ஹிந்தி மாநாடு – 2017 செப்டம்பர் 14 ம் திகதி கொண்டாடப்படும் ஹிந்தி தினத்தை ஒட்டி செப்டம்பர் 13, 2017 அன்று சமூக அறிவியல் பீடத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இந்திய உயர் ஸ்தானிகர், இந்திய கலாச்சார மையம் (ஐ.சி.சி) மற்றும் களனிப் பல்கலைகழகத்தின் ஹிந்தி கற்கைகள் திணைக்களம் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் நோக்கம் “ஹிந்தி மின்-கற்றலை ஊக்குவிப்பதாகும்.
வெளியீட்டின் ஆரம்பமாக ஐ.சி.சி யினால் E-Prayas என்ற தலைப்பில் ஒரு மின் பத்திரிகை வெளியிடப்பட்டது. மற்றும் “பேப் – புன்யா ஈவன் குசஸ் அக்கூஸ்” மற்றும் “ஹதராமன் ஹன்டீ ஹிட்டாகத் மினீசா” என்ற இரண்டு புத்தகங்கள் சிரேஷ்ட பேராசிரியர் உபல் ரஞ்சித் ஹெவிவித்தநாகமகே(தலைவர் ஹிந்தி கற்கைகள் துறை) அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

இந்த மாநாட்டில் திரு. டிரான்ஜித் சிங் சந்து (இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்) ,பேராசிரியர் டி.எம்.சமசிங்க (களனிப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்), பேராசிரியர் லக்ஷ்மன் செனவிரத்ன (பிரதி துணைத் வேந்தர்), மூத்த பேராசிரியர் என்.பி. சுனில் சந்திர(இயக்குநர் ஆராய்ச்சி மையம்),பேராசிரியர் பற்றிக் ரத்னாயாக(பீடாதிபதி மானுடவியல் பீடம்),மூத்த பேராசிரியர் உபுல் ரஞ்சித் ஹெவவிதனகமகே(தலைவர் ஹிந்தி கற்கைகள் துறை),இந்திய உயர் ஸ்தனகத்தின் மற்றும் இந்திய கலாசார மையத்தின் உறுப்பினர்கள்,ஹிந்தி கற்கைகள் துறையின் விரிவுரையாளர்கள் மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் ஹிந்தி பயிலும் பல பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.