அரசறிவியல் துறையினரின் 5வது கல்வியல்சார் இதழ் வெளியீடு

ஜனவரி 2nd, 2018

அரசறிவியல் துறையினரால் 5வது கல்வியல்சார் இதழானது 22.12.2017 அன்று சமூக விஞ்ஞானக் கற்கைகள் பீடத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த இதழானது பல்கலைக்கழக மாணவர்களிடையே எழுத்தாற்றலினை வளர்க்கும் முகமாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கது. களனிப்பல்கலைக்கழகத் துணைவேந்தர். பேராசிரியர். டி.எம். சேமசிங்க, சமூக விஞ்ஞானக் கற்கைகள் பீடத்துப் பீடாதிபதி. பேராசிரியர். எ.எச்.எம்.எச் அபயரத்தின, பேராசிரியர். என்.பி. சுனில் சந்திர, சிரேஸ்ர விரிவுரையாளர், திருமதி. ஜமுனா மெண்டிஸ் முதலானோரும் கல்விசார் ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.