படைப்புக் கைவினைக் கண்காட்சி

ஜனவரி 3rd, 2018

களனிப் பல்கலைக்கழகத்தில் கலாச்சார நடுநிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட படைப்புக்கைவினைக் கண்காட்சி மார்கழி 21ம் திகதி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது. மாணவர்களின் படைப்புக்களை வெளிக் கொணருவதே முக்கிய குறிக்கோளாகும். இக்கண்காட்சியின் மற்றொரு குறிக்கோளாக கலாச்சார நடுநிலையத்தின் பாடநெறிகளை வளப்பதும் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணருவதுமாகும்.
பல்கலைக்கழகத்தின் உதவி உபவேந்தர் பேராசிரியர் லக்ஸ்;மன் செனவிரத்ன அவர்களால் இது திறந்துவைக்கப்பட்டது. விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பீ.எம். ஜயவர்தனா அவர்கள் மாணவ ஆலோசகர் வண.கலாநிதி கப்புகொல்லாவே ஆனந்த கீர்த்தி தேரர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் அனோமா குமார நாயக்கா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றினர். மேலும் மானுடவியல் பீடாதிபதி பேராசிரியர் பற்றிக் ரத்நாயக்கா அவர்கள் தொடர்பாடல் பகுதியின் இயக்குநர் பேராசிரியர் ரோகண லக்ஸ்;மன் பியதாச அவர்கள் ஆய்வு மையத்தின் தலைவர் மூத்த பேராசிரியர் பீ.சுனில் சந்திர அவர்கள் துறைத்தலைவர்கள், பகுதிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்குபற்றினர். பல ஆக்கங்கள் இயற்கை பொருட்களினாலும், வீசப்பட்ட பொருட்களாலும் ஆக்கப்பட்டவை என்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.