மானுடவியல் பீட புதிய கூட்ட அறை திறந்து வைக்கப்பட்டது

ஜனவரி 22nd, 2018

களனிப் பல்கலைக்கழக மானுடவியல் பீடத்தின் புதிய கூட்ட அறை 2018 தை 19ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. பேராசிரியர் கொட்டாஞ்சேனை சிறி பிரக்ஞாகீர்த்தி சுவாமி அவர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டவாறு இது அமைந்திருந்தது.
உபவேந்தர் பேராசிரியர் டீ.எம். சேமசிங்க அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் பதில் உபவேந்தர் பேராசிரியர் லக்ஸ்மன் செனவிரத்ன, மானுடவியல் பீடாதிபதி பேராசிரியர் பற்றிக் ரத்னாயக்க வணிக மற்றும் முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி பி.என்.டி. பெர்னாந்து, மாணவ ஆலோசகர் கலாநிதி வண கப்பு கொல்லாவே ஆனந்த கீர்த்தி அப்பீடத்தின் துறைத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றினர். 316வது கூட்டத்தொடர் புதிய மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழக ஆதி பிதாக்களின் ஞாபகமாக ஒரு நிமிட மௌனம் காக்கப்பட்டது.