களனிப் பல்கலைக் கழகம் உங்களை வரவேற்கின்றது

நவம்பர் 24th, 2014

1959ல் வித்தியாலங்கார பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட களனிப் பல்கலைக் கழகமானது, 1875ம் ஆண்டில் வித்தியாலங்கார பிரிவேனாவாக உருவாக்கப்பட்டதுடன் துறவறம் சார்ந்த கல்வியை வழங்கிய ஓர் உயர்கல்வி நிலையமாகவும் விளங்கியது. அந்த வகையில் களனிப்பல்கலைக் கழகமானது இலங்கையில் காணப்படும் பழமை வாய்ந்த உயர்கல்வி நிலையங்களில் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் மொழி சார்ந்த கற்கை நெறிகள், புவியியல், பௌத்த கற்கை நெறிகள், மெய்யியல், பொருளாதாரம் போன்ற சில கற்கை நெறிகள் மாத்திரம் கற்பிக்கப்பட்டாலும், தற்பொழுது களனிப் பல்கலைக் கழகமானது 60ற்கும் மேற்பட்ட கற்கை நெறிகளைக் கற்பிப்பதுடன், ஆறு பீடங்கள், 44 துறைகளுடன் காணப்படுகின்றது. எமது பல்கலைக்கழகமானது 8, 000 உள்ளக மாணவர்களுக்கும் 30, 000 வெளிவாரி மாணவர்களுக்கும் கல்வியை வழங்குவதுடன், 600 கல்விசார் மற்றும் 650 கல்விசாரா ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.