ஆய்வுச் செயற்பாடுகள் பற்றிய பயிற்சிப்பட்டறை

நவம்பர் 9th, 2017

அன்று களனிப் பல்கலைக்கழக்தின் ஆய்வுச் சபையானது எலிசிவியர் (ELSEVIER) எவ்வாறு களனிப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுச் செயற்பாடுகளுக்கு துணைபுரிகிறது? என்ற தலைப்பினில் களனிப் பல்கலைக்கழக ஆய்வுச் சபை அங்கத்தவர்களுக்கும், கணினி, இணையச் சபை அங்கத்தவர்களுக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது.
ஆசிய ஆய்வு முகாமைத்துவக் கழகத்தின் அதிகாரி, திரு விஜய் எஸ்.ரெட்டி இப் பயிற்சிப்பட்டறையில் உரையாற்றினார். இவர் குறித்த அறிமுகவுரையினை ஆய்வுச் சங்கத்தின் தலைவர், சிரேஸ்ட பேராசிரியர் என்.பி.சுனில் சந்திர ஆற்றினார். எவ்வாறு ‘SCOPUS’ உலக பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் முக்கியம் பெறுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் தொடக்க வைபவத்தில், களனிப் பல்கலைக்கழகப் பிரதித் துணை வேந்தர் பேராசிரியர் லக்ஸ்மன் செனவிரத்தின ஆய்வுச் சபையினால் முன்மொழியப்பட்ட பேராசிரியர் அஜித்த தென்னக்கோன் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.