வியாபார முகாமைத்துவ முதுகலைமானிக் கற்கைகளுக்கான(MBA) 11 வது தொகுதியை உள்வாங்கும் ஆரம்ப நிகழ்வு

செப்டம்பர் 13th, 2017

களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தினால் (FCMS) வழங்கப்படும் வியாபார முகாமைத்துவ முதுகலைமானிக் கற்கைகளுக்கான(MBA) 11 வது தொகுதியை உள்வாங்கும் ஆரம்ப நிகழ்வானது 2017 செப்டெம்பர் 8 ஆம் திகதி கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், FCMS ன் பீடாதிபதி டாக்டர் நாரத பெர்னாண்டோ அவர்கள் அறிமுக உரையையும், பிரதான …

2017 ம் ஆண்டுக்கான நாடளாவிய இலக்கிய விருதுகள் விழாவில் “சிறந்த கட்டமைப்பு மற்றும் உள்ளக வடிவமைப்பு” விருதினை திரு அருணா லொக்குலிய பெற்றுக்கொண்டார்.

செப்டம்பர் 11th, 2017

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 60 வது நாடளாவிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வானது, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி அன்று நெலும் பொகுண தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.…

ஊழிய அபிவிருத்திப் பட்டறை

செப்டம்பர் 6th, 2017

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தின் ஊழிய அபிவிருத்தி நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பட்டறை நீர்கொழும்பில் “கோல்டி சண்ட் ஹோட்டலில்” பல்கலைக்கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.
“தலைமைத்துவ திறன்கள்” என்ற தலைப்பில் திரு.சந்திரசிறி சத்தரசிங்க(நிறுவன பயிற்றுவிப்பாளர்) விரிவுரையொன்றை வழங்கினார். மகாநாம விக்ரமசிங்க(தென்னிந்திய இசை திணைக்களம்,கட்புல …

பேஸ்போல் சாம்பியன்ஸ் உபவேந்தரைச் சந்தித்தனர்

செப்டம்பர் 6th, 2017

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பேஸ்போல் (ஆண்கள்) போட்டியில் சாம்பியன் கிண்ணத்தைப் பெற்ற களனிப் பல்கலைக்கழக பேஸ்போல் (ஆண்கள்) அணியினர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அன்று பல்கலைக்கழகத்தின் செனட் அறையில் பல்கலைக்கழக உபவேந்தரைச் சந்தித்தனர்.
இந்த நிகழ்வானது சாம்பியன்களை ஊக்குவிக்கும் நோக்கில் களனிப் பல்கலைக்கழகத்தின் உடற் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …