மீள உபயோகிக்கக்கூடிய பைகளின் அறிமுகம் மற்றும், CSS மற்றும் இரசாயன கழிவுகள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல் அமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடல்.

ஆகஸ்ட் 31st, 2017

பேண்தகமை மற்றும் தீர்வுகளுக்கான மையம்(CSS) பொலித்தீன் பைகளுக்கு மாற்றாகப் பாவிக்கக்கூடிய மீள உபயோகிக்கக்கூடிய பைகளை அறிமுகம் செய்தது.
ஆய்வக கழிவு மேலாண்மை மீது css மற்றும் INSEE இடையிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வானது ஆவணி 31ஆம் திகதி 2017ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தின் செனட் அறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் D.M. சேமசிங்க (உபவேந்தர்),W.M.கருணாரத்ன(பதிவாளர்),பேராசிரியர் நிலந்தி டி சில்வா (மருத்துவ பீட பீடாதிபதி, மற்றும் இரசாயன கழிவுகள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல் அமைப்பின் தலைவர்),பேராசிரியர் ரோஹோன லக்ஸ்மன் பியதாச(தொடர்பாடல் மற்றும் ஊடக பிரிவின் இயக்குனர்),கலாநிதி U.P.K.எப்பா( இயக்குனர் CSS),திரு சஞ்சீவ சுளகுமர(பொது முகாமையாளர் INSEE-Ecocycle),திரு நஜில ரங்கநாத்(விற்பனை மற்றும் சந்தைபடுத்தல் முகாமையாளர் INSEE – Ecocycle) திரு.சச்சித் ஜெயதிலக (உதவி முகாமையாளர் விற்பனை INSEE-Ecocycle),css இன் உறுப்பினர்கள், இரசாயன கழிவுகள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல் அமைப்பின் உறுப்பினர்கள். மற்றும் பிற கல்விசார் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.