2017 ம் ஆண்டுக்கான நாடளாவிய இலக்கிய விருதுகள் விழாவில் “சிறந்த கட்டமைப்பு மற்றும் உள்ளக வடிவமைப்பு” விருதினை திரு அருணா லொக்குலிய பெற்றுக்கொண்டார்.

செப்டம்பர் 11th, 2017

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 60 வது நாடளாவிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வானது, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி அன்று நெலும் பொகுண தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 2017 ஆம் ஆண்டின் சிறந்த கட்டமைப்பு மற்றும் உள்ளக வடிவமைப்புக்கான விருதை களனிப் பல்கலைக்கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் திரு அருணா லோக்குலியன அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ் விருதானது களனிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் பேராசிரியர் K.M.P. குலசேகரவின் பொருட்டு உருவாக்கப்பட “சம்ப்ரசாடன” எனும் பாராட்டுத் தொகுதிக்காக வழங்கப்பட்டது.
சிரேஷ்ட விரிவுரையாளர் திரு அருணா லொக்குலியன அவர்கள் முன்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடளாவிய இலக்கிய விருது விழாவில் முன்னாள் பேராசிரியர் சுனந்த மகேந்திர அவர்களால் எழுதப்பட்ட “ஜன கியமன் பொத்த” எனும் நாட்டுப்புறக் கதைக்களஞ்சியத்திற்கான ”சிறந்த அட்டைப்பட வடிவமைப்பு” விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், களனிப் பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் மற்றும் மீடியா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மங்கல கீர்த்தி டீ பாஸ்கால் எழுதிய “சாபர்கமுவ காமி நாடக” எனும் புத்தகமானது” ”2017ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி மற்றும் ஆய்வு வெளியீடு” விருதுக்குப் பரிந்துரை செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.