பேராசிரியர் மங்கலிக்கா ஜயதுங்க அவர்களின் ஞாபகார்த்த நூல் வெளியீடு

ஜனவரி 3rd, 2018

பேராசிரியர் மங்கலிக்கா ஜயதுங்க அவர்களின் பதவி இளைப்பாறுதல் ஞாபகார்த்தமாக களனிப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைகள் துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட நன்றி உபகாரம் செய்யும் நிகழ்வு 2017 நொவம்பர் 21ம் திகதி கொட்டாஞ்சேனை பிரக்ஞாகீர்த்தி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் மங்கலிக்கா ஜயதுங்க அவர்களின் ஞாபகார்த்த நூல் இந் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
களனிப் பல்கலைக்கழகத்தின் முந்நாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அமுணுகம அவர்கள் பிரதான உரை நிகழ்த்தினார். அதில் பேராசிரியர் மங்கலிக்கா ஜயதுங்க அவர்கள் செய்த சேவையைப் பாராட்டினார்.
உதவி உபவேந்தர் பேராசிரியர் லக்ஸ்மன் செனவிரத்ன அவர்கள், மானுடவியல் பீடாதிபதி பேராசிரியர் பற்றிக் ரத்னாயக்கா, முன்னாள் பேராசிரியர் சந்திரசிறி பள்ளிய குரு அவர்கள், பேராசிரியர் மங்கலிக்கா ஜயதுங்க, நுண்கலைகள் துறைத்தலைவர் கலாநிதி பிரசாந்தி நாரங்கொட, பேராசிரியர் பீ.டி. நந்ததேவ அவர்கள் உட்பட ஏனைய துறையின் ஏனைய விரிவுரையாளர்கள், ஏனைய துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், இதில் பங்குபற்றினர். அத்துடன் ஞாபகார்த்த நூலும் வெளியிடப்பட்டது.